சோகத்தில் மறைந்த சின்னத்திரை நடிகரின் மனைவி..! நடிகர் சங்கம் உதவி செய்யுமா..? இல்லையா..?
Jun 4, 2025, 08:05 IST

'நிழல்கள்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராஜசேகர். அதன்பின் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். அவர் அவரது மனைவி தாராவுடன் சேர்ந்து சென்னை வடபழனியில் வாழ்ந்து வந்தனர். இந்த வீட்டுக்காக வங்கியில் கடன் வாங்கியிருந்தனர்.
ராஜசேகர் உடல்நலக் குறைவால் காலமான பிறகு அவரது மனைவி தாரா கடனை அடைக்க முயன்றபோதும் சிலர் அவரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி மற்றும் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வீட்டை சீல் வைத்து தாராவை வெளியேற்றியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது தாரா நடிகர் சங்கத்தை நாடி உதவியை கோரியுள்ளார். மேலும் நடிகர் சங்கம் உறுப்பினர்களின் நலனுக்காக செயல்படும் அமைப்பு என்பதால் அவர்கள் தாராவுக்கு தேவையான உதவிகளை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.