பிரபல ஹிட் சீரியல் நடிகை திடீர் மரணம்..!!

பிரபல ஹிட் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் தொலைக்காட்சி ரசிகர்களை சோகமடையச் செய்துள்ளது.
 
vijayalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 1. ஒரேயொரு ட்விஸ்ட்டை வைத்து கொண்டு பல ஆண்டுகளாக ஓடிய சீரியல் என்றால் அது இதுதான். இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் பலர் அடுத்தடுத்து மாறும் அளவுக்கு, பாரதி கண்ணம்மா சீசன் 1 அவ்வளவு நாட்கள் ஓடியது. 

ஆரம்பத்தில் நல்லவிதமாக துவங்கிய தொடர், ஒரேயொரு ட்விஸ்ட்டை வைத்துக்கொண்டு இழுத்தடிக்கப்பட்டதை ரசிகர்கள் பெரிதும் விரும்பவில்லை. அதனால் ரசிகர்களே தயவு செய்து தொடரை நிறுத்திவிட வேண்டும் என்று விஜய் தொலைக்காட்சிக்கு கோரிக்கை விடுக்கத் தொடங்கினர்.

அதற்கு பிறகு பாரதி கண்ணம்மா சீசன் 1-க்கு சுபம் போடப்பட்டது. தற்போது இந்த தொடரின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முன்னதாக ஒளிபரப்பான முதல் சீசனில் கண்ணம்மாவின் பாட்டியாக நடித்தவர் விஜயலட்சுமி. பல ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து வந்த இவர், படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சிறுநீரக பிரச்னையால் அவதி அடைந்து வந்த விஜயலட்சுமி, சில தினங்களுக்கு முன் கழிவறையில் வழுக்கி விழுந்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 14-ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த தகவலை நடிகை விஜயலட்சுமியின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். அவருடைய மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


 

From Around the web