சில நொடிகளில் முடங்கிய TVK செயலி..!

 
1
தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பி வந்த நடிகர் விஜய், கடந்த மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயருடன் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.இதன் காரணமாக தற்போது தனது அரசியல் துறைக்கும், சினிமா துறைக்கும் இடையில் இடையூறு ஏற்படாத வகையில் இரண்டையும் சமாளித்து வருகிறார் விஜய்.

ஆனாலும் தற்போது கமிட்டாகியுள்ள இரண்டு படங்களில் நடித்துவிட்டு முற்றிலுமாக சினிமா துறையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் அதிரடியாகவே வெளியாகின்றது.இந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி நேற்று  மாலை அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி இருந்தது.

நடிகர் விஜய் தனது அரசியல் கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட ஒரு மாதத்தில் 'விலையில்லா வீடு' வழங்கும் திட்டத்தை பற்றி சொல்லியிருந்தார். அவர் அறிவித்ததின் படியே நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இடத்தில் விஜயின் விலையில்லா வீடு வழங்கும் திட்டத்தில் ஏழு வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி சற்று முன் நடிகர் விஜய் அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

ஒரே நேரத்தில் ஏராளமானோர் தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினராக பதிவு செய்ய முற்பட்ட நிலையில், குறித்த செயலி முடங்கியுள்ளது.

இதை தொடர்ந்து வாட்ஸ் அப், டெலிகிராம், செயலி என அனைத்து தளங்களும் முடங்கி உள்ளதாம்.

From Around the web