ஜகமே தந்திரம் படம் தனுஷ் போல புதிய எமோஜியை வெளியிட்ட ட்விட்டர்..!

 
நடிகர் தனுஷின் எமோஜி

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்துக்காக ட்விட்டர் நிறுவனம் தனியாக ஒரு எமோஜியை வெளியிட்டுள்ளது.

கர்ணன் படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. கடந்தாண்டே இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அதற்கான முயற்சிகள் தள்ளிப்போனது.

இந்நிலையில் இந்தாண்டும் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி வரும் 18-ம் தேதி இந்த படம் ‘நெட்ஃப்ளிக்ஸ்’ தளத்தில் வெளியாகிறது.

எனினும் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஜகமே தந்திரம் படத்திற்கான தனி எமோஜியை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

படத்தில் நடிகர் தனுஷுன் கெட்-அப்புக்கு ஏற்ப மீசை வைத்து, கூலிங் கிளாஸ் அணிந்து மிகவும் கலக்கலாக அந்த எமோஜி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் பலரும் எமோஜியை பதிவிட்டு ட்விட்டரில் வைரல் செய்து வருகின்றனர். 
 

From Around the web