ஒரு சில படங்களுக்கு இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது... அஜித் -விஜய் படங்களும் லிஸ்டில் இருக்கு..!

அஜித் நடிப்பில் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ப்ரியமுடன். இப்படத்தில் கௌசல்யா நாயகியாக நடித்திருப்பார். விஜய் முதன் முதலில் இப்படத்தின் மூலம் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் நடித்த வசந்த கதாபாத்திரம் இறப்பது போல தான் இருந்தது. ஆனால் கிளைமாக்ஸ் நெகடிவாக இருப்பதால் பாசிட்டிவான கிளைமாக்ஸை உருவாக்கும்படி தயாரிப்பு நிறுவனம் கூறியிருக்கிறது. எனவே இயக்குனர் வின்சென்ட் செல்வா பாசிட்டிவான கிளைமாக்ஸ் ஒன்றை படமெடுத்துள்ளார். அதனை விஜய் பார்த்துவிட்டு இது செட்டாகாது என கூறவே வின்சென்ட் செல்வா பழைய கிளைமாக்ஸையே படத்தில் வைத்துவிட்டார். ஒரு கிளைமாக்சில் வசந்த் கதாபாத்திரம் இறப்பது போலவும், மற்றுமொரு கிளைமாக்சில் வசந்த் மற்றும் ப்ரியா இணைந்து வாழ்வது போலவும் இருக்கும். ஆனால் விஜய்யும் இயக்குனர் வின்சென்ட் செல்வாவும் நெகட்டிவ் கிளைமாக்ஸ் தான் செட்டாகும் என கூறி நெகட்டிவ் கிளைமாக்ஸையே படத்திற்கு வைத்தனர். அது மிகப்பெரிய அளவில் ஒர்கவுட் ஆனது
மின்சார கனவு
அரவிந்த் சாமி ,பிரபுதேவா மற்றும் கஜோல் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மின்சார கனவு. 1997 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ராஜிவ் மேனன் இயக்கியிருந்தார். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருக்க ஏ.வி.எம் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படத்திற்கும் இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டதாம். முதலில் கிளைமாக்சில் கஜோல் கன்னியாஸ்திரி ஆகப்போறதை அரவிந்த் சாமி தடுத்து நிறுத்தி பிரபுதேவாவிற்கும் கஜோலுக்கும் கல்யாணம் செய்து வைப்பார். இத்துடன் படம் முடியும்படி ராஜிவ் மேனன் எடுத்திருப்பார். ஆனால் வேறொரு கிளைமாக்ஸ் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என படக்குழு கூறியுள்ளனர்.இதையடுத்து அரவிந்த் சாமி சர்ஜ்ல ஃபாதராக இருப்பது போலவும் அப்போது பிரபுதேவா -கஜோல் அவர்களின் குழந்தையுடன் அரவிந்த் சாமியை சந்திப்பது போலவும் வேறொரு கிளைமாக்ஸை எடுத்திருப்பார் ராஜிவ் மேனன்.. இந்த கிளைமாக்ஸ் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது
வேட்டையாடு விளையாடு
கமல்ஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வேட்டையாடு விளையாடு. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இப்படத்திற்கும் இரண்டு கிளைமாக்ஸ் எடுக்கப்பட்டது. முதல் கிளைமாக்சில் ஜோதிகா கதாபாத்திரம் இறப்பது போல எடுத்திருந்தார் கௌதம் மேனன். அதன் பிறகு படத்தை பாசிட்டிவாக முடிக்கலாம் என கருதி ஜோதிகா உயிரோடு இருப்பதை போல கிளைமாக்ஸை முடித்திருப்பார் கௌதம் மேனன். இந்த பாசிட்டிவ் கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது, படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது
முகவரி
அஜித் நடிப்பில் துரை இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் முகவரி. இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பிடித்த படமாக முகவரி இருந்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்தில் அஜித் இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவோடு போராடுவார். ஒரு கிளைமாக்சில் அஜித் இசையமைப்பாளராக ஆகாமல் வேறொரு வேலைக்கு செல்வது போல படமாக்கியிருப்பார் இயக்குனர். ஆனால் ரிலீஸுக்கு முன்னர் படத்தை பார்த்த அனைவரும் படத்திற்கு பாசிட்டிவான கிளைமாக்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என கூறியிருக்கின்றனர். எனவே பாசிட்டிவான கிளைமாக்ஸையும் இயக்குனர் படமாக்கினார் என்பது போல தகவல் வந்தது. ஆனால் அஜித் ஏற்கனவே இருந்த கிளைமாக்ஸ் இருக்கட்டும், அதுதான் நேர்த்தியாக இருக்கும் என கூறியதால் பழைய கிளைமாக்ஸையே வைத்திருந்தனர். படமும் சூப்பர் ஹிட்டானது
மேலும் சில படங்கள்
இதைத்தொடர்ந்து அஜித் நடித்த நடித்த கிரீடம், ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன், ஜீவா நடிப்பில் வெளியான ரௌத்திரம் ,காதலர் தினம் உள்ளிட்ட சில படங்களுக்கு இரண்டு கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது