இந்த உலகத்துல நடக்குற எல்லா கொலைகளுக்குப் பின்னாடியும் அழுத்தமான காரணம் இருக்கும் - வெளியான உதயநிதி படத்தின் ட்ரைலர்..!! 

 
1

ஆக்ஷன் அதிரடி திரைப்படங்களில் தொடர்ந்து பட்டையை கிளப்பி வருகிறார் உதயநிதி. நெஞ்சுக்கு நீதி, கலகத்தலைவன் ஆகிய படங்களுக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு முன்னர் உதயநிதி நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. 

இந்த படத்தில் பூமிகா, சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த ட்ரைலரில் "இந்த உலகத்துல நடக்குற எல்லா கொலைகளுக்குப் பின்னாடியும் அழுத்தமான காரணம் இருக்கும்’ என்ற வசனத்துடன் தெடங்கியுள்ளது.வரும் மார்ச் 17ஆம் தேதி வெளியாகவுள்ள படத்தின் மீதான் எதிர்ப்பர்பை அதிகரித்துள்ளது.  

From Around the web