விவேக் படத்துக்கு மரியாதை செய்துவிட்டு படப்பிடிப்பில் பங்கேற்ற உதயநிதி..!
 

 
விவேக் படத்துக்கு மரியாதை செய்துவிட்டு படப்பிடிப்பில் பங்கேற்ற உதயநிதி..!

தமிழில் ரீமேக் செய்யப்படும் ஆர்டிகள் 15 படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாக நடிகர் விவேக் படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட படக்குழுவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பாலிவுட்டில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி உலகளவில் கவனமீர்த்த திரைப்பட்ம ‘ஆர்டிகள் 15’. சாதிய பாகுபாடுகளால் சமூகம் சந்திக்கும் பிரச்னைகளை த்ரில்லர் கதையமைப்பில் இந்த படம் பதிவு செய்திருந்தது. விமர்சகர்கள் வட்டத்திலும் வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்ற இந்த படத்திற்கு ஃபிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்தியின் அனுபவ் சின்ஹா இயக்கிய இந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் நாசரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தயாரித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். பாடகரும் இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் இணைந்து நடிக்கும் மற்ற நடிகர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. அப்போது மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் உருவ படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட படக்குழுவினர் மலர்தூவி மரியாதை செலுத்துவிட்டு 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதுதொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

From Around the web