அனைவரும் கொண்டாடும் கர்ணன் படத்தில் ஏற்பட்ட தவறு- சுட்டிக்காட்டிய உதயநிதி..!

 
அனைவரும் கொண்டாடும் கர்ணன் படத்தில் ஏற்பட்ட தவறு- சுட்டிக்காட்டிய உதயநிதி..!

தமிழக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் கர்ணன் படத்தின் கதையமைப்பில் ஏற்பட்டுள்ள தவறை உதயநிதி சுட்டிக்காட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படம் கடந்த வாரம் வெளியானது. கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றி ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் கர்ணன் படத்தை பார்த்து படக்குழுவுக்கு பாராட்டுதல் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் அந்த படத்தின் திரைக்கதையில் ஏற்பட்டுள்ள தவறையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, கர்ணன் படம் பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மறுக்கப்பட்ட உரிமையை மிகைப்படுத்துதம் இல்லாமல் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. நண்பர் தனுஷ், அண்ணன் தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன்.


கடந்த 1995-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த போது கொடியன்குளம் கலவரம் நடந்தது. அதை மையப்படுத்தி தான் ‘கர்ணன்’ படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் அச்சம்பவம் 1997ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இந்த தவறை தயாரிப்பாளர், இயக்குநர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளேன். அவர்களும் தவறை இரு தினங்களில் சரி செய்துவிடுகிறோம் என்று உறுதியளித்துள்ளதாக உதயநிதி தகவல் பதிவு செய்துள்ளார். 

From Around the web