பிக்பாஸ் பிரபலத்துடன் கைக்கோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்..!

 
பிக்பாஸ் பிரபலத்துடன் கைக்கோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்..!

ஆர்டிகள் 15 தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வரும் நிலையில், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பிக்பாஸ் பிரபலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டுள்ளார். முடிவுகள் வரும் மே 2-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. அதற்கிடையில் அருண்ராஜா காமராஜா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘ஆர்டிகிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார். இன்னும் இந்த படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை. ’நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படத்தை தயாரித்த போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

பொள்ளாச்சியில் இந்த படத்திற்கான ஷூட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பிக்பாஸ் சீசன் 4 வெற்றியாளர் ஆரி அர்ஜுனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

From Around the web