பொன்னியின் செல்வன் 2 படத்தை கைப்பற்றிய உதயநிதி..!!

தமிழ்நாட்டில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்டு நிறுவனம் வெளியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ponniyin selvan

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. வரும் 29-ம் தேதி சென்னையில் படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நேரு ஸ்டேடியத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன.

முன்னதாக வெளியான பொன்னியின் செல்வன் முதலாம் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் மட்டும் சுமார் ரூ. 400 கோடி வசூல் படைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடையே இந்த படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதே வரவேற்பு இரண்டாம் பாகத்துக்கும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. அதற்கான எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை லைகா தான் வெளியிட்டது. அதனால் இரண்டாவது பாகத்தையும் அதே நிறுவனம் தான் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் ஆச்சரியமாக ரெட் ஜெயிண்டு நிறுவனம் பொன்னியின் செல்வன் 2-வின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. முன்னதாகவே முதல் பாகம் ரெட் ஜெயிண்டு வெளியிடும் என்கிற அறிவிப்பு வெளியானது. ஆனால் சில நாட்களிலே அந்த அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது. அதையடுத்து முதல் பாகத்தை ரெட் ஜெயிண்டு வெளியிடாமல், அந்நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள செண்பகமூர்த்தி லைகா சார்பில் வெளியிட்டார்.

இந்நிலையில் இப்போது பொன்னியின் செல்வன் 2 படத்தை ரெட் ஜெயிண்டு நிறுவனம் நேரடியாக வெளியிடுகிறது. இந்த மாற்றம் குறித்து ஆராய்ந்த போது, சில தகவல்கள் கிடைத்தன. அதன்படி பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை திரையிட்ட திரையரங்குகள் பல, சரியாக கணக்கு விபரங்களை வெளியிடவில்லை. அதை சரிகட்டவே தற்போது நேரடியாக ரெட் ஜெயிண்டு நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது. 

மேலும் முந்தைய பாகத்துக்கு ரசிகர்கள் ஷோ என்கிற பெயரில் சிறப்பு காட்சி நடத்தப்படவில்லை. தற்போது ரெட் ஜெயிண்டு நிறுவனம் படத்தை வெளியிடுவதால், பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு சிறப்பு காட்சி இருக்கும் என்று கூறப்படுகிறது. 
 

From Around the web