மாரி செல்வராஜின் வாழை படத்தை பற்றி ட்வீட் போட்ட உதயநிதி!

சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான மாமன்னன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது…விரைவில் இந்த படம் ஓடிடியிலும் வெளியாக உள்ள நிலையில்,இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய அடுத்த படைப்பை வெளியிட தயாராகியுள்ளார்.
‘வாழை’ தோட்டத்தில் பணியாற்றும் சிறுவர்கள்,மற்றும் தொழிலாளர்களை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது…இதற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்..
கலையரசன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில்,நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது இந்த படத்தை பார்த்து விட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வியர்ந்து பாராட்டியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்..இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில் வாழை உங்களின் சிறந்த படைப்பு,மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்…
Thx sir ! Love u ! #Vaazhai is gonna be your best ! Waiting for your magic again 😘 https://t.co/ibllOpjQ3n
— Udhay (@Udhaystalin) July 21, 2023