மீண்டும் உலகநாயகன் மற்றும் ஸ்ருதிஹாசன் இணையவிருக்கும் கூட்டணி..!

 
1

சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடித்த ’தேவர்மகன்’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் ’போற்றி பாடடி பெண்ணே’ என்ற பாடலின் சில வரிகள் பாடியது குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ருதிஹாசன் என்பதும், அந்த படத்தில் அவர் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து அவர் ’ஹேராம்’ உள்பட ஒரு சில கமல்ஹாசன் படங்களில் ஸ்ருதிஹாசன் பாடல்களை பாடினார். குறிப்பாக கமல்ஹாசன், மோகன்லால் நடித்த ’உன்னை போல் ஒருவன்’ என்ற திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் தான் இசையமைப்பாளர் என்பதும் அந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களை ஸ்ருதிஹாசன் தான் பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஒரு இசை ஆல்பம் உருவாக்க ஸ்ருதிஹாசன் திட்டமிட்டுள்ளதாகவும் இதில் கமல்ஹாசன் பங்கும் இருக்கும் என்று சமீபத்தில் அவர் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இந்த இசை ஆல்பம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன் மீண்டும் இணையும் இந்த இசை ஆல்பத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


 

From Around the web