உலகத்துல எல்லாமே ரெண்டு ... வெளியான ராஜகிளி படத்தின் டீஸர்..!!
Thu, 2 Mar 2023

பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி இயக்கும் திரைப்படம் ‘ராஜாகிளி’. இந்த படத்திற்கு தனது மகனுடன் இணைந்து கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை தம்பி ராமையா கவனித்துள்ளார். இந்த படத்தில் தம்பி ராமையா மற்றும் இயக்குனர் சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தினேஷ் இசையமைக்கவுள்ளார். கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவீன், இயக்குனர் மூர்த்தி, ‘கும்கி’ அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், ‘கும்கி’ தரணி, தீபா, பாடகர் கிரிஷ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.