நெட்ஃப்ளிக்ஸ் வெப் தொடரில் இணைந்து நடிக்கும் மாமன் - மருமகன்..!

 
வெங்கடேஷ் மற்றும் ராணா

தெலுங்கில் தயாராகும் வலை தொடர் மூலம் உறவினர்களான நடிகர்கள் ராணா டகுபாத்தி மற்றும் வெங்கடேஷ் இருவரும் இணைந்து நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளவர் தெலுங்கு நடிகர் ராணா. இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தாலும், தொடர்ந்து தமிழில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘விராட்ட பருவம்’, ‘பீமல் நாயக்’ போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளன. அதிலும் ‘பீமல் நாயக்’ படத்தில் தெலுங்கு சினிமாவின் உச்சநட்சத்திரமான பவன் கல்யாண் உடன் அவர் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து தற்போது ஒரு வெப் தொடரில் அவர் நடிக்கவுள்ளார். அமெரிக்க தொடரான ‘ரே டானவன்’ என்கிற கிரைம் தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இது தயாராகிறது. ‘ராணா நாயுடு’ என்கிற பெயரில் தயாராகும் இந்த தொடரில் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர் நடிகர் ராணாவின் சொந்த தாய்மாமன் என்பது குறிப்பிடத்தக்கது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக கரண் அன்ஷுமான் என்பவர் இந்த சிரீஸை தயாரிக்கிறார். தெலுங்கில் தயாராகும் இந்த தொடருக்கான படப்பிடிப்பு மிகுந்த பொருட்செலவில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

From Around the web