கோயிலுக்குள் சென்ற நடிகர் மோகன்லால்- வேலையிழந்த ஊழியர்கள்..!

 
குருவாயூர் கோயிலில் மோகன்லால்
குருவாயூர் கோயிலுக்குள் நடிகர் மோகன்லாலின் கார் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட விவகாரத்தில் ஊழியர்கள் மூன்று பேரை கோயில் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

கேரளாவில் கொரோனா பரவல் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகரித்து காணப்படுகிறது. இதனுடன் நிபா வைரஸும் பரவி வருவதால் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்நிலையில் நடிகர் மோகன்லால் மனைவியுடன் குருவாயூர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடைய கார் மட்டும் பிரதான நுழைவுவாயில் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி கோயிலுக்குள் எந்த வாகனங்களுக்கும் அனுமதியில்லாமல் இருந்தது. ஆனால் மோகன்லால் அதை மீறி செயல்பட்டுள்ளார். இதற்கு அனுமதி அளித்ததாக கூறி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஊழியர்களை கோயில் நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

From Around the web