சூர்யா 42 பட ப்ரோமோ வீடியோவில் இதுதான் இருக்கும்..!!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 படத்தின் ப்ரோமோ நாளை வெளிவரவுள்ள நிலையில், அதனுடைய அப்டேட் குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்களிடையே பெரும் ஆவல் எழுந்து வருகிறது.
 
suriya 42

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஒரு ஃபேண்டசி படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, படக்குழுவினர் சூர்யா 42 என்று குறிப்பிட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.

விரைவில் படக்குழுவினர் ஜப்பானிலுள்ள ஃபிஜி தீவுக்கு செல்லவுள்ளனர். அதற்கு முன்னதாக தயாரிப்பு நிறுவனம் ‘சூர்யா 42’ படத்தின் அப்டேட்டை வெளியிட திட்டமிட்டு வந்தது. அதன்படி, நாளை இந்த படத்தின் முக்கியமான ப்ரோமோ வீடியோ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து சூர்யா 42 படத்தை எதிர்பார்த்து வரும் ரசிகர்கள் மிகுந்த ஆவல் அடைந்துள்ளனர். அவர்கள் இப்போது #சூர்யா42 என்கிற ஹேஷ்டேகை டிரெண்டு செய்து வருகின்றனர். இந்நிலையில்  ‘ஸ்டூடியோ க்ரீன்’ நிறுவனம் படம் தொடர்பான முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. 

From Around the web