குத்துச் சண்டை கூண்டுக்குள் விஜய் தேவரகொண்டா- நடிகை கொடுத்த அப்டேட்..!

 
பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் மற்றும் விஜய் தேவரகொண்டா

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கான அப்டேட்டை பிரபல நடிகை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் தேசியளவில் கவனமீர்த்தவர் விஜய் தேவரகொண்டா. அதை தொடர்ந்து அவர் நடிக்கும் அனைத்து படங்களும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை பெற்று வருகின்றன.

தெலுங்கு சினிமாவின் கொண்டாடப்படும் இயக்குநரான பூரி ஜெகந்தாத் இயக்கும் ‘லிகர்’ என்கிற படத்தில் அவர் நடித்து வந்தார். தெலுங்கு, இந்தியில் தயாராகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கிறார்.கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு முதல் ஷெட்யூலடன் நின்று போனது. இந்நிலையில் படத்தின் இணை தயாரிப்பாளரான நடிகை சார்மி, லிகர் பட படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டுள்ளதாக அப்டேட் கொடுத்துள்ளார்.

அதனுடன் குத்துச்சண்டை குண்டுக்குள் விஜய் தேவரகொண்டா இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இது படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

From Around the web