’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்து அப்டேட்..!
கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ’சர்தார்’. இந்த படம் 100 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்து வசூல் செய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் கசிந்து உள்ளது.
’சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என தெரிகிறது. கார்த்தி தற்போது நலன் குமாரசாமி மற்றும் பிரேம்குமார் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் அதற்குள் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பை அவர் முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ’சர்தார் 2’ படத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக இசையமைப்பாளர் மாறுவார் என்று தெரிகிறது. முதல் பாகத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஆனால் அதே நேரத்தில் முதல் பாகத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம் உட்பட தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் இரண்டாம் பாகத்தில் பணிபுரிய இருப்பதாகவும் முதல் பாகத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் பிஎஸ் மித்ரன் ’சர்தார்’ இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை எழுதும் பணியை முடித்து விட்டதாகவும் படப்பிடிப்புக்கு தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது.
#Sardar2 shooting to begin from April 2024 🎬💥
— AmuthaBharathi (@CinemaWithAB) December 19, 2023
- In the meantime #Karthi will complete shooting of Nalan & Premkumar movie✅
- While Part-1 Music was scored by GVPrakash, for Part-2 Yuvan was onboard as Music Director 🎶
- Directed by PSMithran, script writing has been… pic.twitter.com/gZW0E89HXk