ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட்..!

 
1

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

டி.இமான் முதன் முதலாக ரஜினி படத்துக்கு இசை அமைக்கிறார். கிராமத்துப் பின்னணியில் சிவாவின் அதிரடி மசாலா, சென்டிமெண்ட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த ஜூலை 1-ம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4 ஆம் தேதி படம் வெளியாகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியை(செப்டம்பர் 10) முன்னிட்டு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

From Around the web