கேன்ஸ் விழாவில் லெஜண்டு நடிகை அணிந்த முதலை நெக்ளஸ் இவ்வளவு விலையா..??

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பிரபல நடிகை ஊர்வசி ரவுத்தலா அணிந்து வந்த முதலை நெக்ளஸின் விலை தொடர்பான விபரங்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளன.
 
urvashi rautela

நடப்பாண்டுக்கான கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா பிரான்ஸில் துவங்கியுள்ளது.  பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், இயக்குநர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். இந்தியா சார்பில் ஐஸ்வர்யா ராய், சாரா அலிகான், ஊர்வசி ரவுத்தல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சிவப்பு கம்பள வரவேற்பில் அவர்கள் ஒய்யாரமாக நடந்து வந்து நிகழ்ச்சி அரங்கிற்குள் செல்வது கேன்ஸ் விழாவின் முக்கிய சிறப்புகளில் ஒன்றாகும். இந்தாண்டு முதன்முறையாக இந்நிகழ்வில் பங்கேற்ற நடிகை ஊர்வசதி ரவுத்தல்லா, கழுத்தில் இரண்டு முதலைகள் சந்தித்தது கொள்வது போன்ற ஒரு நெக்ளஸை அணிந்திருந்தார். 

அந்த அணிகலன் ஃபேஷன் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலை நெக்ளஸின் வடிவமைப்பு, உலோகம், விலை உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க பலரும் முயன்று வருகின்றனர். அந்த வகையில் ஊர்வசி ரவுத்தல்லா அணிந்து வந்த முதலை நகை ரூ. 275 கோடி மதிப்புடையது என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ஊர்வசி ரவுத்தலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், முன்னதாக இந்த இரண்டு முதலைகள் நெக்ளஸ் ரூ. 200 கோடி விலை கொண்டதாக இருந்தது. ஆனால் இப்போது ரூ. 275 கோடியாக உயர்ந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

From Around the web