உஷா உதுப்பின் கணவர் திடீர் மரணம்.. ஆறுதல் கூறும் பிரபலங்கள்..!

 
1

உஷா உதூப்பின் இரண்டாவது கணவர் ஜானி சாக்கோ மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக கொல்கத்தாவில் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழக்கும் போது அவருக்கு 78 வயது என்பதோடு, தற்போது பலரும் அவருக்கு தமது இரங்களை தெரிவித்து வருகின்றார்கள்.

உஷா உதுப் ஏற்கனவே ராமு என்பவரை திருமணம் செய்து அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்கள். அதன் பின்பு உஷா உதுப் ஜானி  சாக்கோவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம்  டிவி பார்த்துக் கொண்டு இருந்த ஜானி சாக்கோவுக்கு திடீரென வியர்த்தது போலவும் அசோகரியமாக இருப்பதாகவும் கூற உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளார்கள்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலே அவர் திடீரென உயிர் இழந்து உள்ளார், அவரின் இறுதிச் சடங்குகள் இன்றைய தினம் கொல்கத்தாவில் அவரது வீட்டில் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

தற்போது ஜானி  சாக்கோவின் மறைவுக்கு பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருவதோடு உஷா உதுப்பிற்கு தமது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றார்கள்.

From Around the web