இன்று மாலை வெளியாகிறது வாத்தி ட்ரைலர்..!! 

 
1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. முதல் முறையாக இந்த படத்தின் மூலம் நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.  தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் சாய்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் பிப்ரவரி 8 ஆம் தேதியான இன்று வெளியாக இருப்பதாக படக்குழு நேற்றைய தினம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வாத்தி ட்ரைலர் இன்று மாலை 5:04 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு புதிய போஸ்டருடன் பகிர்ந்துள்ளது. 


 

From Around the web