வெளிநாட்டுக்கு வெகேஷன்...அதுவும் பிரபல தயாரிப்பாளருடன்...
Oct 17, 2024, 06:35 IST
தனது தோழிகளுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் திரிஷா, தற்போது விஜய் நடித்த கோட் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி உள்பட பல தோழிகளுடன் இணைந்து வெளிநாட்டுக்கு வெகேஷன் சென்றுள்ளார்.
இந்த வெகேஷன் வீடியோவை அர்ச்சனா கல்பாத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 6 பேர் 16 பெட்டியுடன் சென்று இருப்பதாக அவர் தெரிவித்துள்ள நிலையில், திரிஷாவும் 48 மணி நேரம் தூங்காமல் 24 மணி நேரம் பயணம் செய்ததாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தந்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளார் நடிகை திரிஷா.