விவேக் இடத்தையும் நிரப்ப வேண்டிய சூழலில் நான் இருக்கிறேன்- வடிவேலு..!

 
வடிவேலு
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலும், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ள நடிகர் வடிவேலு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எப்போது நான் சந்தித்தேனோ அப்போதே என் வாழ்க்கை பிரகாசமாகிவிட்டது.

ஆண்டவன் புண்ணியத்தில் இப்போதும் எனக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த நடிகர் விவேக் எனக்கு நெருங்கிய நல்ல நண்பராக இருந்தார். அவர் உயிரழந்ததை என்னால் மறக்க முடியாது. அது ஒரு பெரிய வேதனையாக உள்ளது.

ஆனால் இப்போது விவேக் இடத்தையும் நிரப்பவேண்டிய சூழலில் நான் இருக்கிறேன். சுராஜ் இயக்கத்தில் நான் நடிக்கவுள்ள படத்துக்கு ‘நாய் சேகர்’ என்கிற தலைப்பு நிச்சயமாக கிடைக்கும். மேலும் இப்படத்தில் ஒரு பாடல் கூட நான் பாட முடிவு செய்துள்ளேன்.

மீண்டும் சினிமாவில் நான் நடிப்பது குறித்து கேள்விப்பட்ட லாரன்ஸ், சிவகார்த்திகேயன், அர்ஜுன் உள்ளிட்ட பலரும் எனக்கு தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்துச் சொன்னார்கள் என்று வடிவேலு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். சந்திப்பு முடியும் போது, இறுதியாக வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் பாட்டு பாடி அசத்தினார்.

From Around the web