நலன் குமாரசாமி இயக்கத்தில் வடிவேலு..!

 
வடிவேலு
லைக்கா நிறுவனத்திற்காக நடிகர் வடிவேலும் நடிக்கவுள்ள படங்களில், ஒரு படத்தை நலன் குமாரசாமி இயக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள வடிவேலும், லைக்கா நிறுவனத்திற்காக 5 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு படத்துக்கான கதை நலன் குமாரசாமியிடம் அந்நிறுவனம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அந்த கதைக்கான ஆலோசனை பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் சில இளம் இயக்குநர்கள் இயக்கும் படங்களிலும் வடிவேலு நடிக்கவுள்ளார். அதில் ஒரு பெண் இயக்குநருடைய படத்திலும் அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது.

சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர்’ படத்தை முடித்துவிட்டு, லைக்காவின் நலன் குமாரசாமி படத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த படம் தொடர்பான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

From Around the web