தடையை விலக்கினாலும் விடாமல் துரத்தும் பிரச்னை- முடியாத வடிவேலு பஞ்சாய்த்து..!

 
வடிவேலு
வடிவேலு மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடையை சமீபத்தில் விலக்கப்பட்ட நிலையில், இப்போது மேலும் ஒரு சிக்கல் அவர் புதியதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதனால் நிம்மதி அடைந்துள்ள வடிவேலு தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வமுடன் ஆயத்தமாகி வருகிறார்.

அதன்படி சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் அடுத்து நடிக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறினார். இதனால் வடிவேலுவில் வரவை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில் ‘நாய் சேகர்’ என்கிற தலைப்பை பயன்படுத்தக்கூடாது என்று புதிய சிக்கல் உருவாகியுள்ளது. நகைச்சுவை நடிகர் சதிஷ் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லக்ஷ்மி நடிக்கும் படத்துக்கு நாய் சேகர் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

வடிவேலு தன்னுடைய அடுத்தப் படத்துக்கு நாய் சேகர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளதால் புதிய பிரச்னை வெடித்துள்ளது. ஆனால் இந்த பிரச்னையில் வடிவேலு தலையிட்டு விரைவில் சுமூக தீர்வு காண்பார் என கூறப்படுகிறது.

From Around the web