விவேக் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது- கண்ணீர் விட்டு கதறிய வடிவேலு..!

 
விவேக் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது- கண்ணீர் விட்டு கதறிய வடிவேலு..!

சமூக சிந்தனை கொண்ட நடிகர் விவேக்கின் மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும், அவருடைய மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நடிகர் வடிவேலு கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக், இன்று அதிகாலை 4.35 மணியளவில் மரணமடைந்தார். அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர், பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


”நடிகர் விவேக்கின் நெருங்கிய நண்பரும் அவருடன் பல படங்களில் இணைந்து நடித்தவருமான வடிவேலு இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் விவேக்கின் ரசிகன், தன்னை விட எதார்த்தமாக ரசிகர்களுக்கு புரியும் வகையில் பேசக்கூடியவர் விவேக். அப்துல் கலாம் மீது கொண்ட அன்பின் காரணமாக மரம் நடுதலின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைத்தவர்.”

”நானும் அவரும் நிறைய படங்களில் சேர்ந்து நடித்துள்ளோம். வெளிப்படையாக எதையும் பேசிவிடக்கூடிய விவேக்கின் மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போது மதுரையில் இருப்பதால் என்னால் விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை” என்று கண்கலங்க கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.  அவருடைய இரங்கல் வீடியோ சமூகவலைதளங்களில் பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 

From Around the web