இயக்குநர் ஷங்கர் சகவாசமே வேண்டாம்- வடிவேலு பரபரப்பு..!

 
இயக்குநர் சங்கர் மற்றும் வடிவேலு

இனிமேல் சங்கர் இயக்கும் படங்களிலும், அவர் தயாரிக்கும் படங்களிலும் நடிக்கமாட்டேன் என்று வடிவேலு திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இயக்குநர் சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

நான் நடிக்கமால் இருந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் உருவானது. அப்பொது தான் என்னுடைய பிரச்னை எவ்வளவு சாதாரணமானது என்பதை உணர்ந்தேன். இன்னலான அந்த நேரத்தில் மக்களுக்கு நான் நடித்த நகைச்சுவை காட்சிகள் கைகொடுத்ததாக தெரியவந்தது.

இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளேன். தொடர்ந்து 4 படங்களில் நடிக்கவுள்ளேன். எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த சுபாஸ்கரன், சபாஷ் கரணாகிவிட்டார். இந்நேரத்தில் கடவுளுக்குக்கும் மக்களுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறுகிறேன்.

எனக்கு எண்டே கிடையாது. நான் கால் வச்ச இடத்தில் எல்லாம் கண்ணிவெடி வச்சாங்க.. எல்லாத்திலயும் தப்பித்து விட்டேன். என் மீது வந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய். இனிமேல் சங்கர் தயாரிப்பில், இயக்கத்தில் நடிக்க மாட்டேன். அதுபோல் வரலாற்று படத்தில் நடிக்க மாட்டேன் என்று வடிவேலு திட்டவட்டமாக கூறிவிட்டார்.

From Around the web