மாரி செல்வராஜுக்கு  ஆதரவாக பேசிய வைகை புயல் வடிவேலு..!

 
1
இயக்குனர் மாரி செல்வராஜ் அவரது சொந்த ஊரில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு களத்தில் இறங்கி உதவி செய்து வருகிறார்.

அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட சென்றபோது, இயக்குனர் மாரி செல்வராஜூம் உடன் சென்றிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகின. மேலும் இதற்கு விமர்சனங்களும் எழுந்தன.

இந்த நிலையில் நடிகர் வடிவேலு இயக்குனர் மாரி செல்வராஜுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “அது அவருடைய ஊர். அந்த ஊரில் மேடு, பள்ளம் எங்கு இருக்கிறது என அவருக்குத் தான் தெரியும். ஏன் போகக்கூடாதா? அவர் ஊரில் அவர் போகாமல், வேறு யார் போவது? அவர் என்ன அமெரிக்காவில் இருந்து வந்திருக்காரா?,” என்று தெரிவித்தார்.

From Around the web