தீபாவளி நாளில் ரசிகர்களை சந்திக்க வரும் வடிவேலு..!

 
வடிவேலு

மீண்டும் தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க துவங்கியுள்ள வடிவேலு, தீபாவளி பண்டிகையின் போது பிரபல தொலைக்காட்சியில் உருவாகும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

தமிழ் திரைத்துறையில் நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்தவர் வடிவேலு. பல்வேறு பிரச்னைகள் காரணமாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இயக்குநர் ஷங்கருடன் இருந்து வந்த பிரச்னைக்கு சமாதானம் கண்டதை அடுத்து மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

அதில் முதல் படத்தை இயக்குநர் சுராஜ் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை தொடர்ந்து, உதயநிதி - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் ஒரு படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தீபாவளி நாளில் கலைஞர் டி.வி.-யில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளார் வடிவேலு. நீண்ட காலத்துக்கு பின்னர் டிவி நிகழ்ச்சியில் வடிவேலு பங்கேற்கவுள்ளது பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

From Around the web