சிறு மாறுதலுடன் ‘நாய் சேகர்’ படத்தில் நடிக்கும் வடிவேலு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

 
நாய் சேகர் படத்தில் வடிவேலு

வடிவேலு மீண்டும் திரையுலகுக்கு ரீஎண்ட்ரி கொடுக்கும் படத்திற்கு சிறு மாறுதலுடன் ‘நாய் சேகர்’ என்கிற தலைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட உருவாக்கப் பணிகளின் போது இயக்குநர் சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. இதனால் படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.

வடிவேலுவின் இந்த நடவடிக்கையால் தனக்கு மிகப்பெரிய பொருட்செலவு ஏற்பட்டதாக கூறி தயாரிப்பாளர் ஷங்கர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வடிவேலு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.

சமீபத்தில் இருதரப்புக்கும் இடையே சமரசம் உருவானது. இதனால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தினால் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்காவுக்கு 4 படங்கள் நடித்து கொடுப்பதாக வடிவேலு ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவற்றில் முதல் படத்தை சுராஜ் இயக்குகிறார். இதற்கான சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது படத்துக்கு நாய் சேகர் என தலைப்பு வைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக வடிவேலு உறுதி செய்தார்.

ஆனால் அதற்குள் காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு நாய் சேகர் என்கிற டைட்டில் வைக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் வடிவேலு - சுராஜ் கூட்டணியில் உருவகும் படத்திற்கான தலைப்பு விவகாரத்தில் மாற்றம் வருமா என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படத்துக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்கிற தலைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

முற்றிலும் நகைச்சுவை பின்னணியில் உருவாகும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள், மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் யார் என்கிற விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web