சிரிப்பு செத்துவிட்டது- விவேக் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்...!

 
சிரிப்பு செத்துவிட்டது- விவேக் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்...!

எல்லோரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே என்று கவிஞர் வைரமுத்து நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவ்த்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய திடீர் மறைவு திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள், விளையாட்டுத் துறை பிரபலங்ல< ரசிகர்கள், பொதுமக்கள் என பல தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர் விவேக்கின் திடீர் மறைவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, 
“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.

கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’க் கதாநாயகன்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

From Around the web