உங்களை சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் வருகிறாள் வள்ளுவன்பேட்டையின் வீர மங்கை கயல்விழி..!

 
1

இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

இந்நிலையில், ‘ரகு தாத்தா’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு “ஆத்தி… கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா! உங்களை சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் வருகிறாள் வள்ளுவன்பேட்டையின் வீர மங்கை கயல்விழி! ரகு தாத்தா, விரைவில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்” என்று பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

From Around the web