விஜய் டிவியை விட்டு பிரபல தொலைக்காட்சிக்கு தாவிய வனிதா...!

 
வனிதா விஜயகுமார்

பிரபல ரியாலிட்டி ஷோவில் இருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார், மற்றொரு பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் இணைந்து ஆடினார் வனிதா. குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியில் நடுவர் ரம்யா கிருஷ்ணனுக்கும்  வனிதாவுக்கும் இடையில் பிரச்னை வெடித்தது.அதனால் விஜய் டிவியில் இருந்து மொத்தமாக வனிதா வெளியேறினார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்து வந்தார். வேறு எந்தவிதமான டிவி நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்காமல் இருந்தார்.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள வனிதா, கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் கன்னி தீவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். காமெடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதாக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

From Around the web