கொல்கத்தாவில் மீண்டும் திருமணம் செய்துகொண்ட வனிதா..?

 
வனிதா விஜயகுமார்

பிரபல நடிகை வனிதா விஜயகுமார் புதியதாக ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுதொடர்பாக அவரே விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமார், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானதை தொடர்ந்து, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

முன்னதாக பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமனம் செய்துகொண்டார் வனிதா. ஆனால் அவர் குடிகாரர் என்று கூறி அந்த உறவை முறித்துக்கொண்டார். இதையடுத்து அவர் மீது பீட்டர் பாலின் முதல் மனைவி பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். எனினும், தொடர்ந்து சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.


இந்நிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த விமானி ஒருவரை நடிகை வனிதா திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் பரவின. இதுகுறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ள அவர், உங்கள் அனைவருக்கும் ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே இருக்கிறேன். அப்படி இருக்கவே விரும்புறேன். எந்தவொரு வதந்தியையும் பரப்பவோ, நம்பவோ வேண்டாம் என்று கூறி திருமணம் குறித்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
 

From Around the web