கொரோனா தேவியை வைத்து கோவையன்ஸ் செய்த செயலால் செம கடுப்பில் வனிதா...!

 
வனிதா விஜயகுமார்

கோயம்புத்தூரில் நிறுவப்பட்டுள்ள கொரோனா தேவி சிலையை நடிகை வனிதா விஜயகுமாரின் கெட்-அப்புடன் ஒப்பிட்டு வெளியான மீம்ஸ் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய - மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதிலும் வட இந்தியாவில் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக சிலர் செய்யும் முயற்சிகள் அதிர்ச்சியை தருகின்றன.

தென்னிந்தியாவில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் கொரோனாவை ஒழிக்க முன்னெடுத்துள்ள முயற்சி மேலும் அச்சமூட்டுவதாக உள்ளது. கோவை இருகூர் பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பத்த ’கொரோனா தேவி’ என்கிற பெயரில் சிலை நிறுவி வழிபட்டு வருகின்றனர்.


அங்கு வரக்கூடிய மக்கள் விரைவில் கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்று வேண்டுதல்களை முன்வைக்கின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கொரோனா தேவி சிலையை நடிகை வனிதாவுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் சிலர் மீம்ஸுகளை உருவாக்கியுள்ளனர். சமூகவலைதளத்தில் வனிதாவை டேக் செய்து சிலர் போஸ்ட் போட்டு வருகின்றனர்.

இதனால் கடுப்பான நடிகை வனிதா,  "எல்லோரும் இதை ஏன் எனக்கு ஷேர் செய்கிறார்கள்? என்று பதிவிட்டு தன்னுடைய எதிர்ப்பை காட்டியுள்ளார். கொரோனா தேவி செய்திகளுக்கு இடையே வனிதாவின் மீம்ஸும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

From Around the web