மறைமுகமாக பீட்டர் பால் மரணத்துக்கு வனிதா இரங்கல்..!!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கெடுத்த வனிதா விஜயகுமாருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவானது. அந்நிகழ்ச்சியை விட்டு அவர் எலிமினேட்டான நிலையில், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.
அப்போது கிராஃபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வந்த பீட்டர் பால் என்பவருடன் வனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறியதை அடுத்து, வனிதாவின் 2 மகள்களும் வனிதா மற்றும் பீட்டர் பாலுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
அப்போது கொரோனா காலக்கட்டம் என்பதால், வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி அவர்களுடைய திருமணம் நடந்தது. இது வனிதா விஜயகுமாருக்கு நடந்த நான்காவது திருமணமாகும். அதேபோல பீட்டர் பாலுக்கு அது இரண்டாவது திருமணமாகும்.
அந்த திருமணத்தால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், திருமணமான நான்கே மாதத்தில் பீட்டர் பாலை விட்டு பிரிவதாக வனிதா விஜயகுமார் அறிவித்தார். இந்நிலையில் நேற்று பீட்டர் பால் உடல்நலக்குறைவால் காலமானார்.
அவருடைய மறைவையொட்டி சமூகவலைதளத்தில் ஒரு பதிவு போட்டுள்ள வனிதா, பீட்டர் பால் இறப்புக்கு மறைமுகமாக இரங்கல் கூறியுள்ளார். அதன்படி “நீயே உனக்கு உதவினால் தான் கடவுளும் உனக்கு உதவுவார் என்று என் அம்மா அடிக்கடி கூறுவார். இது எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமான பாடமும் இதுதான். உங்களைச் சேர்ந்த துயரங்களுடன் போராடி, தற்போது அமைதியான நிலைக்கு சென்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் இந்த உலகத்தை விட்டு சென்றதற்காக வருத்தப்படும் அதே நேரத்தில், நீங்க இப்போது சிறந்த, அமைதியான இடத்தில் இருப்பீர்கள் என எனக்கு தெரியும். எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்" என வனிதா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.