எனக்கு இருக்கும் நோயால் கழிப்பறைக்குக் கூட போக முடியாது- வனிதா விஜயகுமார்..!!

நடிகை வனிதா விஜயகுமார் தனக்கு இருக்கும் நோய் பாதிப்பு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளது மக்களிடையே கவனமீர்த்து வருகிறது.
 
vanitha

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து வனிதா குறித்த ஒவ்வொரு செய்தி மற்றும் நடவடிக்கைகள் மக்களிடம் அதிகம் கவனமீர்க்கிறது. அந்த வகையில் நடிகை வனிதா தனக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அவருடைய சமீபத்திய பேட்டியில் தனக்கு கிளாஸ்ட்ரோபோபியா என்கிற பாதிப்பு இருப்பதாக கூறியுள்ளார். இது தன்னிடம் நெருக்கமாக இருக்கும் நபர்களுக்கு தெரியும் எனவும், இதனால் பல்வேறு இன்னல்களை தனது தினசரி வாழ்க்கையில் சந்தித்து வருவதாக வனிதா பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட சின்ன பகுதியில் என்னால் இருக்க முடியாது, அதேபோன்று லிஃப்ட் மற்றும் கழிவறை போன்ற இடங்களிலும் என்னால் நீண்ட நேரத்துக்கு மேல் இருக்க முடியாது. அதனால் என்னால் பொது கழிப்பறைக்கு செல்ல முடியாது. எப்போதும் அச்ச உணர்வு தொற்றிக்கொள்ளும். இதனால் 2 நாட்களாக தொடர்ந்து கழிவறைக்கு போகாமல் அவதி அடைந்துள்ளேன்.

திரைப்பட படப்பிடிப்புகளின் போது வெறும் உடை மாற்றுவதற்கு மட்டுமே கேரவனை பயன்படுத்துவேன். அங்குள்ள கழிப்பறையைக் கூட நான் பயன்படுத்தமாட்டேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது கூட எனக்கு கிளாஸ்ட்ரோஃபோபியா சூழ்நிலை இருந்தது. அதை சமாளிப்பதற்கான சூழல் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

என்னுடைய வாழ்க்கையில் என்னால் ஒரே இடத்தில் அடைந்து கிடக்க முடியாது. நான் அங்கு இருக்கமாட்டேன். என்னுடன் அந்த சூழலில் இருப்பவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அவர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டு வெளியேறிவிடுவேன். இதுதான் எனக்குள்ள வேதனையாகும் என நடிகை வனிதா அந்த பேட்டியில் மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.


 

From Around the web