பணமாலை அணிந்து வீட்டில் விசேஷ பூஜை நடத்திய வனிதா..!

 
வனிதா விஜயகுமார்

விஜய் டிவியை விட்டு வெளியேறியதால் பணமின்றி தவிக்கும் வனிதா மீண்டும் பணம் கிடைக்க வேண்டி வீட்டில் விசேஷ பூஜை நடத்தி புகைப்படம் பதிவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்ததன் மூலம் சர்ச்சை நாயகியாக பிரபலமானார் வனிதா விஜயகுமார். சமீபத்தில் துவங்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடினார். இதனால் அவர் வைரல் நாயகியாக மக்களிடையே பிரபலமானார்.

இதுவரை பிக்பாஸ் சீசனில் பங்கெடுத்த போட்டியாளர்களை வைத்து விஜய் டிவி ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதில் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறினார். இப்போது தன்னுடைய யூ-ட்யூப் சேனலை மட்டும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வனிதா தன்னுடைய வீட்டியில் லக்‌ஷ்மி குபேரா பூஜை நடத்தியுள்ளார். அதற்காக அவரும் அவருடைய மூத்த மகளும் பணமாலை அணிந்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியகி வைரலாகி வருகிறது. மீண்டும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமாக வேண்டும் என்கிற நோக்கில் வனிதா இந்த பூஜையை மேற்கொண்டதாக தெரிகிறது.


 

From Around the web