காதலனுடன் திருமணம் : 2வது மனைவியாகும் வரலட்சுமி..?

 
1

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை வரலக்ஷ்மி.தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சர்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் நடித்து முத்திரைப் பதித்தார்.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி எடுக்கும் வரலக்ஷ்மி, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். அங்குள்ள ரசிகர்களுக்கு அவருடைய வில்லத்தனமாக நடித்து பிடித்துப் போக கொண்டாடி வருகின்றனர். அண்மையில் வெளிவந்த ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் கூட அவருடைய கதாபாத்திரம் பேசப்பட்டது. 

திரையுலகில் பல நட்பு வட்டாரங்களை கொண்டுள்ள இவர், நடிகர் விஷாலை காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் தங்களுக்குள் வெறும் நட்பு மட்டுமே உள்ளது, எந்த காதலும் கிடையாது என்று பலமுறை சொல்லி இருக்கிறார். எனினும் வரலக்ஷ்மி நடிகர் விஷாலை காதலித்து வருவதாகவே திரையுலகில் சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் இனிமேல் அப்படி சொல்வதற்கு வாய்ப்பு கிடையாது. நடிகை வரலக்ஷ்மிக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதற்கான நிகழ்வில் இரு வீட்டாருடைய குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். 

கடந்த 1ம் தேதி நடந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் வரலக்ஷ்மியின் தந்தை சரத்குமார் மற்றும அவருடைய தாயார், உடன் பிறந்த தங்கை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் சரத்குமாரின் மனைவி ராதிகா, அவருடைய மகள் ரேயான், மகன் ராகுலும் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். தற்போது அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை வரலக்ஷ்மிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதை அடுத்து, ரசிகர்களும் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். அவரை திருமணம் செய்யும் நிக்கேலாய் சச்தேவ் பிரபல ஓவியரும் கூட. அவருக்கு சொந்தமாக மும்பையில் பிரமாண்டமான ஆர்ட் கேலரி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது 38 வயதாகும் வரலக்ஷ்மி சரத்குமார் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவருடைய அடுத்த படமான ‘ராயன்’ விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. தனுஷ் நடித்து இயக்கும் இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் மாறுபட்டதாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் மலையாளத்தில் கலர்ஸ் மற்றும் தெலுங்கில் சபரி ஆகிய படங்களிலும் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்து வருகிறார். 

இவர்களின் நிச்சயதார்த்த போட்டோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வரலட்சுமி திருமணம் செய்து கொள்ளும் நிகோலய் சச்தேவ் யார் என்பதை இணையத்தில் பலர் தேடி வருகின்றனர். இவர் கேலரி 7 என்கிற பெயரில் பெரிய ஆர்ட் கேலரி ஒன்றை வைத்து இருக்கிறார். அவருடைய அப்பா அருண் சச்தேவ் அம்மா சந்திரா சச்தேவ் இருவரும் சேர்ந்து 1970ம் ஆண்டு ஆர்ட் கேலரியை தொடங்கினார்கள். அவர்களுக்கு பிறகு நிகோலய் சச்தேவ் இந்த ஆர்ட் கேலரியை கவனித்து வருகிறார்.
 

நிகோலய் சச்தேவ்க்கு 2009ம் ஆண்டே கவிதா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு பிறந்தவர் தான் காசா சச்தேவ், 15 வயதாகும் விளையாட்டு வீராங்கனையாக இருக்கிறார். நிகோலய் சச்தேவ் 41வயதாகும் நிலையில், 38 வயதாகும் வரலட்சுமி அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

From Around the web