இந்திய முறைப்படி நடந்து முடிந்தது வரலட்சுமி – நிக்கோலாய் சத்தேயின் திருமணம் – வைரல் போட்டோஸ்..!!
Jul 13, 2024, 01:04 IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார் . இந்நிலையில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகை வரலட்சுமி திருமணம் செய்யப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.
இந்நிலையில் இவர்களின் திருமணம் தாய்லாந்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் இந்திய முறைப்படி சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இதையடுத்து இந்த ஜோடிக்கு ரசிகர்கள் திரை பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி செம வைரலாகி வருகிறது.