பிரபல சினிமா குடும்பத்தின் வாரிசு நடிகருடன் லாவண்யா காதல்..??
பிரம்மன், மாயவன் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனமீர்த்தவர் லாவண்யா திரிபாதி. இவர் தெலுங்கு மொழியிலும் நிறைய படங்களை நடித்துள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர், தற்போது பிரபலமான சினிமா குடும்பத்துக்கு மருமகளாக உள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கு சினிமாவில் மிகவும் நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற குடும்பங்களில் ஒன்று சிரஞ்சீவியின் கோனிதேலா குடும்பம். சிரஞ்சீவியின் முதல் இளைய சகோதரரின் மகன் தான் வருண் தேஜ். பல்வேறு தெலுங்குப் படங்களில் நடித்து, தற்போது முன்னணி நடிகர்களுக்கான வரிசையில் இருக்கிறார்.
இவரும் நடிகை லாவண்யா திரிபாதியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஜோடி ஜூன் மாதத்தில் திருமணம் நிச்சயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை தொடர்ந்து நடப்பாண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் வருண் தேஜின் உடன்பிறந்த சகோதிரி தான் நிஹாரிகா கோனிதேலா என்பது குறிப்பிடத்தக்கது.