காதலில் விழுந்த சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த்.. விரைவில் எங்கேஜ்மென்ட்!

விஜய் டிவி சீரியல்களுள் மிகவும் பிரபலமான சீரியலாக காணப்படுவது தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் சமீப காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதும் இதற்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது. விறுவிறுப்பாக நகரும் இதன் கதைக்களம் நாளுக்கு நாள் மாறுபட்ட ரீதியிலேயே ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிப்பவர் தான் வெற்றி வசந்த். இவர் முத்து என்ற கேரக்டரில் நடித்து வருகின்றார். இவருக்கு என்றே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது. இயல்பாகவே தனது நடிப்பை மூலம் ரசிகர்களை கட்டி போட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியலிலும் இவரது கேரக்டர் ரசிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் இருந்தே கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்தார் என விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குறும்படம் ஒன்றை போட்டு காட்டிருந்தார்கள். தற்போது பலராலும் கொண்டாடப்படும் ஒரு நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார்.
இந்த நிலையில், வெற்றி வசந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட் நியூஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது பொன்னி சீரியலில் நடிக்கும் வைஷு சுந்தருக்கும் வெற்றி வசந்துக்கும் இந்த வாரத்திற்கு உள்ளேயே எங்கேஜ்மென்ட் நடக்க உள்ளதாம். இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது எங்கேஜ்மென்ட் செய்ய உள்ளார்கள் என்ற தகவலை பகிர்ந்துள்ளார்கள்.
இதுவரையில் வெற்றி வசந்த் பல பேட்டிகளில் பேசியபோதும் தனது காதல் பற்றி குறிப்பிடவில்லை. அதேபோல பொன்னி நடிகையும் சீக்ரெட் ஆகவே வைத்திருந்தார். தற்போது இந்த காதல் ஜோடியை பலரும் வாழ்த்தி வருகின்றார்கள்.