எங்களுக்கு என்ன நடந்தோ அவங்களுக்கு அப்படியே நடக்கணும் - த்ரில்லர் ஜானரில் வெளியான ‘வசந்தமுல்லை’ டிரெய்லர் !
Mon, 6 Feb 2023

பாபி சிம்ஹா நடித்து வெளிவரவிருக்கிற திரைப்படம் ‘வசந்த முல்லை’. த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தை குறும்பட இயக்குனர் ரமணன் புருஷோத்தமன் இயக்கியுள்ளார். பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக புதுமுக நாயகி காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். எஸ்.ஆர்.டி.எண்டர்டையின் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரித்து வரும் இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். நடிகர் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழியில் வெளியாகவுள்ளது.இப்படத்தின் இப்படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. த்ரில்லர் பாணியில் மிரட்டு வகையில் உள்ள இந்த டீசருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.