24 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவா, அரவிந்த் சாமியை சேர்த்து வைக்கும் வெங்கட் பிரபு..!

 
பிரபுதேவா, வெங்கட் பிரபு மற்றும் அரவிந்த் சாமி
நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு  இயக்கவுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அதை தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் அவர் இயக்கி முடித்துள்ள ‘மன்மத லீலை’ படத்திற்கும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்திற்கான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி நிதின் சத்யா தயாரிப்பில் அரவிந்த் சாமி மற்றும் பிரபுதேவா நடிக்கும் படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு.

முன்னதாக இவர்கள் இருவரும் 1997-ம் ஆண்டு வெளியான ‘மின்சாரக் கனவு’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில்  யுவன்சங்கர்ராஜா அல்லது ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாக்கிட வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். அதற்காக படக்குழுவினரை தேர்வு செய்வதில் மிகுந்த முனைப்புடன் அவர் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

From Around the web