பவதாரிணியுடன் கடைசியாக எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்ட வெங்கட் பிரபு..!
Jan 31, 2024, 07:05 IST
பவதாரிணி உடன் எடுத்த கடைசி புகைப்படம் என உருக்கமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் வெங்கட் பிரபு.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சையின் பலன் இன்றி சமீபத்தில் காலமானார். அவரது மறைவு திரையுலகினர்களுக்கும், இளையராஜா குடும்பத்தினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பவதாரிணி உடன் எடுத்த கடைசி புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இதில் பவதாரணியின் தலையில் முத்தம் கொடுப்பது போல் இருக்கும் ஒரு புகைப்படமும் இன்னொரு புகைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி உடன் வெங்கட் பிரபு இருக்கும் புகைப்படம் உள்ளது.