ராதிகா சீரியலில் இருந்து வெளியேறிய சஞ்சீவ்- உள்ளே வந்த வெங்கட்..!!

விரைவில் ஒளிபரப்பாகவுள்ள கிழக்கு வாசல் தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த சஞ்சீவ் வெளியேறியதை அடுத்து, அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் வெங்கட் ரங்கநாதன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
venkat

சித்தி 2 தொடர் படுதோல்விக்கு பிறகு ராதிகா தயாரித்து வரும் சீரியல் ‘கிழக்கு வாசல்’. விஜய் தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்டு வரும் இந்த தொடரில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், சஞ்சீவ், ரேஷ்மா முரளிதரண் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.

கிழக்கு வாசல் சீரியல் பூஜை படங்கள் கூட இணையத்தில் வெளியாகின. அதில் எஸ்.ஏ. சந்திரசேகர், சஞ்சீவ், ரேஷ்மா, ஆனந்த் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அன்றைய நாளில் ஒரு சில காட்சிகள் கூட படமாக்கப்பட்டன. ஆனால் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட பிரச்னையால் சஞ்சீவ் அந்த தொடரில் இருந்து வெளியேறினார்.

ஒரு தொடர் ஒளிபரப்புக்கு வருவதற்கு முன்னரே, அதிலிருந்து கதாநாயகன் வெளியேறியது சின்னத்திரை உலகில் பரபரப்பை கிளப்பியது. இதனால் தொடருக்கான கதாநாயகன் சம்மந்தப்பட்ட காட்சிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. அதற்கு பதிலாக முக்கிய நடிகர்களுடைய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் கிழக்கு வாசல் தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் வெங்கட் ரங்கநாதன் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் படப்பிடிப்பு கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் மே மாத இறுதிக்குள் இந்த தொடருக்கான ஒளிபரப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

சித்தி சீரியலின் படுதோல்விக்கு பிறகு நடிகை ராதிகா பெரும்பாலும் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். ஒருவேளை கிழக்கு வாசல் தொடர் நல்ல டி.ஆர்.பி-யை குவிக்கும் பட்சத்தில், தொடரில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

From Around the web