சன் டிவிக்கு சொல்கிறாரா வெங்கடேஷ் பட் ..?

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல்வேறு பிரபலங்களும் வரிசைகட்டி நிற்பார்கள். இதற்கு காரணம், அதில் பங்கு பற்றுவதன் மூலம், பலருக்கு சினிமா வாய்ப்புகள் குவியும் என்பதால் தான்.

இறுதியாக பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக சென்றது. இதில்  இதுவரையில் இல்லாதவாறு சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதாவது பிரதீப் அன்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட விடயம். இந்த சம்பவம் இன்று வரை பேசுபொருளாகவே காணப்படுகிறது.

அதேவேளை, குக் வித் கோமாளியும் பிரபலமாக காணப்பட்டது. ஆனால் இதில் இருந்து வெங்கடேஷ் பட் விலகி இருந்தார். அவர் சன் டிவியில் சுட சுட சமையல் என்ற புது நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பதிலாக சன் டிவியில் புது நிகழ்ச்சி ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாம். அதற்கு கமலை போலவே பிரபலமான ஒருவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என பேசப்படுகிறது.

இவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு எதிராக புதிய புதிய நிகழ்ச்சிகளை சன் டிவி ஒளிபரப்ப துடிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

From Around the web