மூத்த நடிகர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி..!

 
நடிகர் பாலகிருஷ்ணா

தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த நடிகரும் முன்னாள் முதல்வருமான என்.டி. ராமராவின் மகன் பாலகிருஷ்ணா. இவரும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக உள்ளார். 60 வயதை கடந்துவிட்ட நிலையிலும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக அவர் உள்ளார்.

தற்போது இவர் சீனு என்பவர் இயக்கும் ‘அகண்டா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. அடுத்ததாக கோபிசந்த் மாலினேனி இயக்கும் படத்தில் அவர் நடிக்கிறார்.

கடந்த ஆறு மாதங்களாக பாலகிருஷ்ணாவுக்கு தோள்பட்டையில் வேதனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து அவர் ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் தற்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வேதனை இருக்கும் இடது தோள்பட்டையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

From Around the web