பிரபல நடிகர் மறைவு..!சோகத்தில் ரசிகர்கள்..!
1983 ஆம் ஆண்டு மலையாள திரைப்படம் அஷ்த்ரம் மூலம் தனது நடிகர் பயணத்தை தொடங்கிய மேகநாதன், தொடக்கத்தில் பல முக்கிய குணச்சித்திர வேடங்களில் திறமையை வெளிப்படுத்தினார். பின்னர், வில்லன் கதாபாத்திரங்களில் 50க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் திறம்பட நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார்.
மேகநாதனுக்கு மனைவி சுஸ்மிதா மற்றும் மகள் பார்வதி உள்ளனர். சமீபத்தில் சுவாச கோளாறு காரணமாக கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
அவருடைய மரணம் மலையாள திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பாக கருதப்படுகிறது. பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேகநாதனின் நடிப்பு திறமை மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் அவரது தனித்துவமான நடிப்பு, அவரது நினைவுகளை நிரந்தரமாக ரசிகர்களின் மனதில் வாழ வைக்கும்.